About us
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் கணக்காளாராக இருந்த சோணாச்சலப்பிள்ளை- கன்னியம்மாள் தம்பதியருக்கு 30-11-1954ல் இளைய மகனாக ஜோதிமைந்தன் சோ.பழநி ஜனனம்.
- திருவண்ணாமலை சந்திரசேகரன்- சுசீலா தம்பதியருக்கு 16-03-1961ல் மூத்த மகளாக அமுதவல்லி அவர்கள் ஜனனம்

7-6-1976ல் ஜோதிமைந்தன்-அமுதவல்லி இருவருக்கும் பெரியோர்களால் திருமணம் செய்விக்கப்பட்டனர்
1977 தைப்பூச வடலூர் ஜோதி தரிசனம் மூலம் திருவருட் பிரகாச வள்ளலார் எனும் சிதம்பரம் இராமலிங்கம் ஐயா அவர்களை குருவாக ஏற்றனர்.
திருவாசகம், திருப்புகழ் போன்ற நூல்களை வழிபாடு நூல்களாக வைத்திருந்த சூழலில்
திருவருட்பா வாழ்க்கையில் இணைந்தது.
- 1991ல் கனவில் தெய்வீக காட்சிகள் காணும் பாக்கியம் பெற்றனர். விஷ்ணுரூபமாய் பிறப்பின் இரகசியமும். தேவ ரகசியமும் கனவில் கிடைக்கப்பெற்றனர்.
- 1992 முதல் இல்லத்திலேயே நடராஜர் அபிஷேகம் வருடத்திற்கு ஆறுமுறை குடும்பத்தாருடன் செய்து மற்ற தெய்வங்களையும் வழிபட்டு வந்தனர்.
- 1995 நவம்பர் மாதம் 13ம் தேதி குடும்பத்தாருடன் வடலூர் சென்று சித்திவளாக திருமாளிகையில் 10 நாட்கள் தொடர் வழிபாடு செய்தநிலையில்
13.11.1995 அன்று காலையில் தியானத்தில் திரியம்பல வாயில் காட்சியும் இதுமுதல் சுத்த சன்மார்க்க வழிமுறையும் கடைபிடிக்க கட்டளையிட்டு விவரங்களை பேருபதேசத்தில் காண்க என கட்டளை பிறந்தது.
- பத்து நாட்கள் தங்கிய போது பல்வேறு சமயங்களில் அருள்சக்தியானது வள்ளல் பெருமானால் ஜோதிமைந்தன் சிரசில் வழங்கப்பட்டது
10-12-1995ல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் நேரடியாக அருள்சக்தி ஜோதிமைந்தனுக்கு வழங்கப்பட்டது
- 16-12-1995ல் இருட்பேறு விலக்கும் சக்தி பெற்றது.
10-1-1996ல் முற்பிறவிகளை ஜோதிமைந்தன் அவர்களுக்கு வெளிப்படுத்தி தன்னிலை அறியச்செய்தது
15-2-1996ல் முற்பிறவிகளை அமுதவல்லி அவர்களுக்கு வெளிப்படுத்தி தன்னிலை அறியச்செய்தது.
22- 2-1996ல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன் அன்பு மகனாக அங்கீகரித்தது.
28-02-1996 அமுதவல்லி அவர்கள் மனிதர்களுக்குள்ள மாயை விலக்கும் சக்திபெற்றத.
16-3- 1996ல் தொடர்விளக்கு ஏற்றப்பட்டது
26-03-1996ல் வீரபத்திரன் தாட்சாயணி படைவீடு காட்சி
10-11-1996ல் பக்திமார்க்கத்திலிருந்து
ஞானமார்க்கத்திற்கு முழுமையாக வழிவிட்டு கர்த்தாக்கள் விலகியத.
22-04-1998ல் மகாமந்திரபீடம் அமைக்க கட்டளையிடப்பட்டது
26.06.1998 ல் மகாமந்திர பீடத்தில் தொடர் ஜோதி ஏற்றப்பட்டது.
- 10-08-1998ல் சன்மார்க்க தூதுவராக அங்கீகரிக்கப்பட்டு அதற்கான கட்டளைகளை தேவர்களுக்கு எடுத்துரைத்து புனித பயணம் மேற்க்கொள்ளப்பட்டது
