ஜோதிமைந்தனின் சொல்லோவியம் - 2

அன்பும் அழகும் ஒன்று சேர்ந்தால் அதுவே கலைஞானம்
அழகும் அறிவும் ஒன்று சேர்ந்தால் அதுவே விஞ்ஞானம்
அறிவும் அன்பும் ஒன்று சேர்ந்தால் அதுவே மெய்ஞானம்
அன்பும் அழகும் அறிவும் சேர்ந்தால் அதுவே தெய்வீகம்

அழகு மட்டும் ஆட்சி செய்தால் ஆணவம் உருவாகும்
அறிவு மட்டும் ஆட்சி செய்தால் ஆதிக்கம் உருவாகும்
அன்பு மட்டும் ஆட்சி செய்தால் ஆன்மநேயம் உருவாகும்

அழகின் எழுச்சி சூழ்ச்சியில் நிற்கும்
அறிவின் எழுச்சி வீழ்ச்சியில் நிற்கும்
அன்பின் எழுச்சி ஆட்சியில் நிற்கும்
ஆன்மநேயத்தின் எழுச்சி உலகர் அனைவருக்கும்
துர்க்குணங்களை வீழ்ச்சியுற செய்து
சாதி சமய மத சூழ்ச்சியிலிருந்து விடுவித்து
சன்மார்க்க சக்திகளின் ஆட்சியை உருவாக்கும்.