ஜோதிமைந்தனின் சொல்லோவியம் - 3

ஜோதிமைந்தன் சோ. பழநி அவர்களிடம் இந்த கவிதையை அருபெருஞ்ஜோதி ஆண்டவரிடம் விண்ணப்பம் வைக்கும்படி கவிஞர் வலம்புரி வெங்கட் வழங்கியவை இங்கு வள்ளலார் அன்பர்கள் பார்வைக்கு சமர்பிக்கபடுகிறது.

சித்திரை பூத்தது

சித்திரை பூவிது பூத்தது
சிந்தனை தேன் துளி சேர்ந்தது
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு – இது
பாரத தேசத்து பண்பாடு
அறுபது வருடங்கள் தமிழ் ஆண்டு – இது
ஆன்றோர்கள் செய்து வைத்த ஏற்பாடு

விஞ்ஞான தத்துவம் இதில் உண்டு – இதை
மாற்ற முயல்வது முரண்பாடு
காலங்கள் மாறினாலும் மாறாது -இந்த
கணக்கினில் பிழையேதும் கிடையாது
பத்தோடு பதினொன்று இதுவல்ல
பார்த்து எண்ணிட பணமல்ல – உலக

சொத்தாக இருப்பது என்றென்றும்-இது
சோதனையில் மீண்டு வந்த கணக்காகும்
ஆண்டவன் வகுத்த நியதி இது
அருள் ஞானிகள் மூலம் வந்ததிது
பாரெல்லாம் ஆய்ந்து ஏற்றதிது
பகலவன் பாதையில் செல்கிறது

ஆண்டவர் அருளும் கிடைத்திடவேண்டும்
அருள்வள்ளலார் கருணையும் கனிந்திடவேண்டும்
திருத்திய நெஞ்சங்கள் திருந்திடவேண்டும்
மீண்டும் சித்திரை மலர்ந்திட வேண்டும்
சித்திரை முதலே புத்தாண்டு என
சத்திய ஞானிகள் பகர்ந்திட வேண்டும்

என விண்ணப்பிக்கும் கவிஞர் வலம்புரி வெங்கட்