மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி - 20 (ஆன்ம வேகம் )
துறவறமும் உறவறமும (தொடர்ச்சி)
மேலும் உறவறம் (உறவு+அறம்) கடப்பிடிப்பவர்கள் ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் அடிப்படையில் செயல்ப்படுவதால் மனிதன் பிறந்ததிலிருந்து மேலான நிலையைஅடையும் வரை அவன் உறவறத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கலாம், இதில் துறவறம் அவசியமில்லை. ஏனெனில் துறவிகள் துறவு மேற்கொள்வதில் முக்கிய காரணங்களில் ஒன்று, சுக்கிலம் சிற்றின்பத்தில் செலவிட்டால் மேல்நிலையை அடைய முடியாது என்ற நம்பிக்கையே காரணம். ஆனால் மனித உடலில் இறைவன் ஜீவசக்தியாகிய சுக்கிலத்தை , கீழ்நிலை சுக்கிலமென்றும், மேல்நிலை சுக்கிலமென்றும் இரண்டு இடத்தில் வைத்தார். மேலே இருப்பது யோகத்தினால் வரும் பேரின்ன்பத்திற்கும் கீழே இருப்பது போகத்தினால் வரும் சிற்றின்பத்திற்கும் பயன்படும் படியாக மனித உடலை அமைத்துள்ளார்.
மனிதன் அனைத்தையும் கடமையுணர்வோடு செய்கையில் தனது ஜீவசுதந்திரம், தேக சுத்ந்திரம், போக சுதந்திரம் அனைத்தைய்யும் அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் ஒப்புவித்து செயல்படுகையில் சிற்றின்பத்தால் பேரின்பமோ அல்லது பேரின்பத்தால் சிற்றின்பமோ பாதிக்க படுவதில்லை. இது அனுபவத்தால் கண்ட உண்மை. மேலும் துறவு நிலையை கொண்டவர்கள் ஆன்ம படிநிலையில் விஷ்ணுப் படிநிலை வரை தான் அதிக பட்சமாக செல்ல இயலும். ருத்ர படிநிலையிலிருந்து மேலும் உயர தனி ஆன்மாவாக உயர இயலாது. இன்னொரு ஆன்மாவானது சகநிலையில் தேவை.
இரண்டு ஆன்மாக்கள் இணைந்தே படிநிலை கடக்க இயலும். இதற்கு மிக முக்கிய காரணமாக அமைவது ஆன்ம வேகமாகும். இதன் காரணமாகத்தான் பஞ்சகிருத்தியங்களை கணவன் மனைவியாக உள்ளவர்கள் அடைய முடிகிறது. எனவேதான் பஞ்சகிருத்திய பதவிகளுக்கு பிரம்மா-சரஸ்வதி, விஷ்ணு-லக்ஷ்மி, மகேஷ்வரன்-மகேஷ்வரி எனப் பெயரிட்டு, கடந்த காலத்தில் மனிதர்கள் அந்த பதவிகளை அடைய முயற்சித்து ஒரு சிலர் வெற்றியும் பெற்றார்கள். அவர்களின் வரலாற்றில் ஏற்ப்பட்ட சில நிகழ்வுகள் உயர்வு நவிற்சியுடன் இணைந்து புராணமாக வெளிப்பட்டது. மேலும் துறவு மேற்கொண்டப்பின் இந்த அருளியல் கோட்பாட்டை அறிந்து கொண்ட சில அருளாளர்கள் தாங்கள் வணங்குகின்ற தெய்வங்களையே சக நிலையில் கணவனாக கருதி செயல்பட்டு படிநிலை உயர முயற்சித்தார்கள் . ஆனால் அவர்கள் கடவுளாக வணங்கி கணவனாக வரித்த ஆன்மாக்களுக்கு ஸ்தூல தேகம் இல்லாததால் பக்தி நிலையிலேயே தடைப்பட்டு பஞ்ச கிருத்தியங்களை கடக்க முடியாமல் போனது. மேலும் ஒரு சாதாரண 91வது படிநிலையிலுள்ள மனிதனின் ஆனமாவின் வேகம் நொடிக்கு 11 மீட்டர் ஆகும். அந்த மனிதனின் ஆன்மாவானது 93வதுபடி நிலையான நீல உலகில் பிரவேசிக்கும் தன்மையை பெற வேண்டுமானால் குறைந்த பட்சம் ஒரு நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும்.
எந்த ஆன்மாவானது நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டரை விட அதிகமாக வேகம் செல்கிறதோ அதுவே தெய்வத் தன்மைகளை அடையும்பக்குவம் பெற்று மாயா தெய்வ படிநிலைகளில் முதல் படிநிலையான 93வது படிநிலையில் பிரவேசிக்கும் சக்தி பெற்ற ஆன்மாவாக்கும். நமது பால்வெளி அண்டத்தில் மிக அதிக வேகமுடையது ஒளியின் வேகமாகும். ஒளியானது நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் செல்கிறது. ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகமுடைய ஒன்றை விஞ்ஞானத்தால் இன்றைய கால கட்டத்தில் அறிய முடியவில்லை. விஞ்ஞானத்தால் அறிய முடியாத ஒளியை விட வேகமாக செல்லக்குடிய ஒன்று இந்த பிரப்ஞ்சத்தில் இருக்குமானால் அதன் பெயர் டாக்கியன் என்றும், அது மூன்று லட்சம் கிலோ மீட்டர் வேகத்தை விட அதிக வேகம் செல்லும்போது நீல நிற ஒளியை (ஒளிகீற்று) ஏற்ப்படுத்தும் என்றும் அந்த விளைவிற்கு “செரங்கொவ் விளைவு” என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஒளியை விட வேகமாக செல்லக் கூடிய ஒன்று இருக்கிறதென்றால் அது ஆன்மாதான் என்றும், ஒளியை விட வேகமாக செல்லும்போது முதலில் நீலநிற உலகில் ச்ஞ்சரிக்கின்றது என்றும் அந்த முதல் தெய்வீக உலகமே 93வது படிநிலையாக இருக்கிறது என்று வள்ளல் பெருமான் உணர்த்துகிறார். மேலும் இன்றைய காலக் கட்டத்தில் நொடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் அடைய வேண்டுமெனில் சைவ உணவை உண்ணும் மனிதர்களின் ஆன்மாக்களால்தான் அந்த பக்குவத்தை அடையமுடியும் என்றும் மனிதனின் இயற்கை நியதி சைவ உணவே, இயற்கை நிய்தி மீறியவர்களால் உடல் பக்குவமும் ஆன்ம வேகமும் அடைய முடியாது என்றும் உணர்த்துகிறார். யாம் ஏற்கனவே கூறியவாறு சன்மார்க்க வழிபாடுகளை மேற்கொண்டால், சன்மார்க்க நெறிமுறைகளை கடைபிடித்தால் மனித தேகத்தில் இருக்கும் போதே 91வது படிநிலையில் நொடிக்கு 11 மீட்டர் செல்லும் ஆன்மாவானது வேகம் எடுத்து நொடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் வேகம் செல்லும் போது முறையே பச்சை உலகம், சிவப்பு உலகம், மஞ்சள் உலகம், வெண்மை உலகம், பல வண்ண மயமான உலகம், யோக வல்லப உலகம் அடைவார்கள். யோக வல்லப உலகம் கடந்து யோக ஞானியர் நிலை அடையும் போது ஆன்மவேகம் நொடிக்கு 10 லட்சம் கிலோமீட்டராக இருக்கும். 10 லட்சம் கிலோ மீட்டர் ஒரு நொடியில் கடக்கும் வன்மையும் தன்மையும் பெற்ற ஆன்மாக்கள் திரியம்பல வாயிலில் அருபெருஞ்ஜோதி ஆண்டவரின் அற்புதக் காட்சி பெற்று ப்ஞ்சக்கிருத்தியங்களில் முதல் படிநிலையான பிரம்மா உலகத்தில் சஞ்சரித்து பிரம்ம கிருத்தியம் அடையும் தன்மையும் பெற்று ஆண்டவரிடம் வரம் பெறுவார்கள். மேலும் வேகம் பெற்று விஷ்ணு படிநிலை கடக்கும் யோகி இரண்டு ஆன்மாக்கள் சகநிலையில் இணைந்து ஒருவருக்கு ஒருவர் துணையாய் இருந்து ருத்ர உலகம், மகேஷ்வர் உலகம், சதாசிவ உலகம் ஆகியவைகளை கடந்து 105 வது படிநிலையான ஞானிகள் உலக்த்தை அடையும் போது அந்த ஆன்மாக்களின் வேகம் ஒரு நொடிக்கு பதினோரு கோடியே பதினோரு லட்சத்து பதினோராயிரத்து நூற்றி பதினோரு கிலோ மீட்டர் ஆகும். இத்ற்கு மேல் தனித்தனி ஆன்மாவாகும். மேலும் ஆன்ம வேகம் பெற்று தனித்தனியே சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான தேகம், பெற்று முறையே உயர்கையில் ஒருநொடிக்கு ஆயிரம் கோடி கிலோ மீட்டர் வேகத்தை அந்த ஆன்மா அடைகின்றது. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் வேகம் அதுவே என அறிக. பஞ்ச கிருத்தியங்களை கடக்க மட்டும் சக ஆன்மாவின் துணை தேவை அதன் பின் ஒரு நொடிக்கு ஆயிரம் கோடி கிலோ மீட்டர் வேகத்தை ஆன்மா அருள் சக்தியால் அடையும் போது அண்ட அண்டங்களுக்கு அப்பாலும் சென்று வரும் ஆற்றலை பெற முடியும். மேலும் ஆன்மாவை பற்றி விவரிக்கும் முன்பாக் ஆன்மாவையும் ஸ்தூலதேகத்தையும் ஒன்றிணைத்து தேக பக்குவத்தையும் ஆன்ம வேகத்தையும் ஆன்ம பெருக்ககத்தையும் உருவாக்கி செயல்ப்படுத்தும் மூளையைப் பற்றிய விவரங்களை இங்கே ஆய்வு செய்வது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறோம்.
மனித மூளையானது எண்ணிப் பார்க்க இயலாத அற்புத ஆற்றல்களை ஒருங்கே அமையப் பெற்றது. அதாவது இந்த பிரபஞ்சத்தை எத்துணை அற்புதமாக வடிவமைத்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வழி நடத்தி வருகிறாரோ அந்த அளவுக்கு அற்புத ஆற்றல்களை மனிதர்களின் மூளைக்கு வழங்கி ஒவ்வொரு ஆன்மாக்களின் தற்சுதந்திரமாய் கொடுத்துள்ளார். ஒரு மனிதனின் மூளையானது செயல் பட வழி வகை செய்வது இரத்தமும் மனித மின் சக்தியுமாகும் மனிதனில் உற்பத்தியாகும் மின்னோட்டம் மூளையில் செயல்படும் ஒரு குறிப்பிட்ட அலை வரிசையை தனக்கு தானே உருவாக்கி கொள்கிறது. அந்த அலை வரிசையானது குணங்களாலும் உணர்வுகளாலும், எண்ணங்களாலும் கட்டுப் படுத்தப் படுகின்றது. அந்த அலைவரிசையானது செயல்படாமல் பூஜ்யத்திலிருந்தால் அதை விஞ்ஞானத்தில் மூளை மரணம் என்று மெய்ஞ்ஞானத்தில் பிண நிலை என்று கூறுவார்கள். மூளையானது நொடிக்கு ஒன்று முதல் நான்கு அலைகளை ஏற்ப்படுத்தினால் விஞ்ஞானத்தில் அதை டெல்டா நிலை அல்லது கோமா நிலை என்றும் மெய்ஞ்ஞானத்தில் பிரேத நிலையென்றும் கூறுவர். நொடிக்கு 5 முதல் 8 அலைகளை ஏற்படுத்தினால் விஞ்ஞானத்தில் தீட்டா நிலை என்றும் உறக்க நிலை என்றும் மெய்ஞானத்தில் தாமச நிலை என்றும் கூறுவர்
மூளையானது 9 முதல் 14 அலைகளை ஒரு நொடிக்கு உருவாக்கினால் அதை விஞ்ஞானத்தில் ஆல்பா நிலை மற்றும் விழிப்பு நிலை என்றும் மெய்ஞ்ஞானத்தில் சத்வ நிலை தெய்வீக நிலை என்றும் கூறுவர்.
மூளையானது ஒரு நொடியில் 15க்கு மேற்ப்பட்ட அலைகளை உருவாக்கினால் அதை விஞ்ஞானத்தில் பீட்டா நிலை என்றும் மெய்ஞ்ஞானத்தில் ராஜச நிலை என்றும் அலை வரிசை உயர உயர உணர்வுகளுக்கு ஆட்ப்பட்ட நிலை என்றும் அறிவுக்கு கட்டுப்படாத நிலை என்றும் கடைசியில் விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் இரண்டும் சொல்லும் பைத்திய நிலை என்றும் உருவாகிறது.
(தொடரும்)
ஜோதிமைந்தன் சோ. பழநி
