1200px-Sathya_gnana_sabha,_vadalur_1
cropped-vad-1.jpg
Tirukappitta Arai
previous arrow
next arrow

இன்றைய தகவல்

    வள்ளல் பெருமானின் அருள் ஆசியால் கீழ்கண்ட லட்சியங்களை அடிப்படையாக கொண்டு சமூக சேவையாக இந்த அறக்கட்டளை செயல்படும். கடந்த 30 ஆண்டுகளாக ஆன்மீக இல்லற சன்மார்க்க அருள் அரசாட்சி செய்து வந்த மகாமந்திரபீடம் 21:02:2024 முதல் கீழ்கண்ட பணிகளை படிப்படியாக செய்ய ஆரம்பிக்க மகாமந்திரபீட அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது.


  • அன்னதானம்:முதற்க்கட்டமாக காலை ஒரு வேளை உணவு ஆரம்பிக்கப்பட உள்ளது. சிறிது காலத்தில் அனைவருக்கும் மூன்று வேளை உயர்தர உணவு ஏற்பாடு செய்ய மகாமந்திரபீடம் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

  • மொழித்திறன்: அன்பர்களின் ஆளுமை திறனை உயர்த்தும் பொருட்டு தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வல்லுநர்களை கொண்டு மொழிதிறன் பயிற்சி அந்தந்த மொழியை ஆரம்பிக்க மக்கள் கொள்ளும் ஈடுபாடு அடிப்படையில் வகுப்பு ஆரம்பிக்கப்படும்.

  • கல்வி: ஏழை பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள், நோட்டு, பேனா, பென்சில், புத்தகப்பை வழங்கப்படும்.

Latest Posts

கட்டுரைகள்

ஜோதிமைந்தனின் சொல்லோவியம் – 1

இல்லாத ஊருக்கு வழி கேட்பதும்,
சொல்லாத வார்த்தைக்கு விளக்கம் கேட்பதும்,
கல்லாத மனிதனை கட்டளை யிடுவதும்,
நில்லாத காலத்தை நினைக்காமல் இருப்பதும்,
கல்லாக மனதை கட்டி போடுவதும்,
தள்ளாத வயதில் துள்ளி யாடுவதும்,
முள்ளாக இருந்து பிறர் முன்னேற்றத்தை தடுப்பதும்,
வல்லார்கள் செயலை புல்லாய் நினைப்பதும்,
நல்லார்கள் மனதை நடுங்க செய்வதும் என்றும் ஆபத்தானது,

நேற்றைய செயல் இன்று திருந்தச்சொல்லும் தவறினால்,
இன்றைய செயல் நாளை வருந்தச் சொல்லும்,

கருடன் பார்வை பாம்பின் மீது,
பாம்பின் பார்வை தவளையின் மீது,
தவளையின் பார்வை பூச்சியின் மீது,
பூச்சியின் பார்வை புழுவின் மீது,
புழுவின் பார்வை புல்லின் மீது,
புல்லின் பார்வை கல்லின் மீது,
கல்லின் மீதும் கடவுளின் உருவம்,
கருடனின் மீதும் கடவுளின் உருவம்,
கடவுளின் பார்வை அனைத்தின் மீதும்,
அறியா விட்டால் அனைத்தும் வீழும்,
அறிந்து கொண்டால் அனைத்தும் வாழும்.

—ஜோதிமைந்தன் சோ. பழநி

தினம்தோறும் தேன்துளிகள்

தேன்துளிகள்-1

தேன்துளிகள்-1

08-01-2024 காலை- 5:55 மணி

          கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளல் பெருமானின் ஆசிகள்.ஒரு கலாச்சாரம் என்று இருந்தால் அதை தொடர்ந்து பேணிகாப்பதற்காக உருவாக்கப்படும் தொகுதிகளும் பகுதிகளும் தான் சாதிகளாகவும் சமயங்களாகவும் மதங்களாகவும் உருவாகின அவற்றிற்கு இடையே உருவாகும் ஆதிக்க மனப்பான்மை ஒரு சிலரின் தவறான அணுகுமுறையால் பண்பாட்டையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் நிலை கால மாற்றத்தால் ஏற்படுகிறது.இதன் மூலகாரணமாக யாரேனும் ஒரு தனி மனிதனின் வக்கிர குணங்களே அடிப்படையாக இருக்கும் அந்த காலகட்டத்தில் நல்ல செயல்களுக்கான அடையாளமாக ஒருமனிதன் உருவாகி சீர்கெட்ட பண்பாடு கலாச்சாரத்தை ஒழுங்கு படுத்தி நிலைநிறுத்துவார். அது போன்ற மேன்மக்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். அவர்களை பாரத பண்பாட்டில் குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் சித்தர்கள் என்றும் அருளாளர்கள் என்றும் ஆழ்வார்கள் என்றும் நாயன்மார்கள் என்றும் ஞானிகள் என்றும் யோகிகள் என்றும் துறவிகள் என்றும் அவரவர் சீர்திருத்தம் செய்ய எடுத்துக் கொண்ட துறையை பொருத்து பெயர் கொடுத்தார்கள். அதிலும் ஒருசிலரின் பக்குவம் அடையாத நிலையில் ஏற்பட்ட தீர்க்க தரிசன வெளிப்பாடுகளும் பிற்காலத்தில் சமுதாய மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதுண்டு. காலத்தால் உருவான இது போன்ற மகான்களில் வள்ளல் பெருமான் பக்தி நிலையிலிருந்து ஞான நிலைக்கு உயர்ந்த பின் தமது கருத்துகளில் இது போன்ற குழப்பம் வந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் அதையும் தெளிவுபட பல்வேறு வகையில் கூறியுள்ளார்.அதில் முக்கியமான விஷயம் பக்திநிலையில் இருக்கும் போது விபூதி தரித்தார்.ஞான நிலைக்கு உயர்ந்தவுடன் இறைவன் வழக்கமாக திருநீறு வழங்குவார் இன்று எனக்கு திருநீறுக்கு பதிலாக பூ வழங்கினார் அதைப்பற்றி கேட்டபோது நீயே திருநீராக உள்ளாய் அந்த நிலை கடந்த உனக்கு பூ மட்டுமே வழங்குவோம் எனக் கூறினதாக தமது திருவருட்பா பிரசாத மாலை பாடல்களில் குறிப்பிடுகிறார்அதன்பின் திருநீறு அணிவதை தவிர்த்தார்.மேலும் வழிபாட்டு முறைகளில் சந்தேகம் உருவாவதை தவிர்க்க உருவவழிபாடு அருவ வழிபாடு அவரவர் பக்குவ நிலைக்கு ஏற்ப செயல்படுங்கள்.என்று இதையே ஒரு குழப்பமாக முன்னிறுத்த வேண்டாம்.தனிப்பெருங்கருணையை முன்னிறுத்தும்படி கட்டளையிட்டார்.எல்லா காலங்களிலும்.எமது ஆன்மநேய ஒருமைப்பாட்டுக்கு தெரிந்தே கருத்துபேதம் உருவாக்கிகளங்கம் உருவாக்குபவர்களை ஆண்டவரிடம் விட்டு விடுவேன் என்றார்.சுபம்.

-ஜோதிமைந்தன்.

மேலும் படிக்க

தேன்துளிகள்-2

தேன்துளிகள்-2

07-01-2024 காலை 5.55 மணி

  கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள்.யாம் கூறும் கருத்துக்கள் பழந்தமிழர் பண்பாடு எவையெல்லாம் சிறப்புடைய தன்மை கொண்டவைகளோ அவற்றை முன்னிறுத்துவதை அடிப்படையாக கொண்டவைகள். காரணம் வள்ளல் பெருமான் அவர்கள் சமயங்கள் தோன்றுவதற்கு முன்பிருந்த தமிழர் பண்பாட்டை அடிப்படையாக கொண்ட தமிழை தாய்மொழியாக கொண்ட மக்களால் பின்பற்றப்பட்ட பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு சன்மார்க்க சங்க இயல்பை வடிவமைத்ததுடன் பழந்தமிழர்களால் உருவாக்கப்பட்ட அண்டவியல் கோட்பாட்டையும் அணுவியல் கோட்பாட்டையும் ஆதாரமாக கொண்டு திருவருட்பா பாடல்களை எழுதினார்.கி.பி.எட்டாம் நூற்றாண்டில்தான் அவையெல்லாம் சமஸ்கிருதத்திற்கு மொழிமாற்றம் செய்யப் பட்டன.கலியுகம் தோன்றி ஐயாயிரம் ஆண்டுகளிலிருந்து படிப்படியாக பக்திமார்க்கம் வலிமை பெறும்போது தமிழ் ஞானிகளெல்லாம் கடவுளாக உருவாகி சிலையாகிபோயினர் அவர்களின் கண்டுபிடிப்புகள் ஸமஸ்கிருத மொழி வளமைக்கு ஏற்றவாறு மொழிமாற்றம் செய்யப் பட்டன.தோன்றிய சமயங்கள் சமயங்கடந்து வாழ்ந்த தமிழர் பண்பாட்டை அழித்தன.வேத சமயமும்,வைணவமும் மட்டும் பழந்தமிழர் பண்பாட்டில் வாழ்பவர்களை அழிக்காமல் தமது சமயத்தின் கீழ் கொண்டுவந்தனர்.யாம் நேர்மறை கருத்துக்களை மட்டுமே முன் வைத்து ஆன்மநேய ஒருமைப்பாட்டை வலியுறுத்த முனைவதால் மற்ற சமயங்கள் எவ்வாறு சமயங்கடந்த பண்பாட்டை அழித்தன என்ற வரலாற்றினுள் செல்லவில்லை.வள்ளல் பெருமான் அவர்களின் அருட்பெருஞ்ஜோதி அகவலை படித்தால் அதில் சமயங்கடந்த அணுவியல் மற்றும் அண்டவியல் கருத்துக்கள் புலனாகும்.ஐயாயிரம் ஆண்டுகளாக அணுவியல் கருத்துக்களை ஆய்வு செய்தவர்களை சிவன் என்றும் அண்டவியல் கருத்துக்களை ஆய்வு செய்தவர்களை விஷ்ணு என்றும் இந்த கருத்துக்களையும் மற்றுமுள்ள பல்வேறு கருத்துக்களை தொகுத்தவரை பிரம்மா என்றும் இந்த கோட்பாடுகளை அறிந்து அதிலிருந்து யாகம் ஹோமம் என்றகிரியைகளை உருவாக்கியவர்களை முருகன் என்றும் யோகசக்தியை பயன் படுத்தி செயல்படும் முறையை வழங்கியவர்களை விநாயகர் என்றும்.கடவுளர்களாக்கி அவர்களை நடுகல் வழிபாட்டை நவீனப்படுத்தி அதில் அவர்களின் தத்துவங்களை மனித ரூபத்தில் புகுத்தி சரியை வழிபாட்டை காலம் உருவாக்கி விட்டது.தமிழ் மறைகளும் முறைகளும் கவனிப்பாரின்றி மறைந்து போயின.தமிழ் எல்லையும் சுருங்கிவிட்டன.உலகநன்மைக்காக மீண்டும் சமயங்கடந்த தமிழர் பண்பாட்டை மீளுருவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்த பூவுலகில் வாழும் மனிதர்களுக்கு உள்ளது.அந்த பணியை வள்ளல் பெருமான் ஆரம்பித்து வைத்தார்.அவர் உருவாக்கிய பாதையில் நாமும் தொடர்வோம். சுபம்.

-ஜோதிமைந்தன்.

மேலும் படிக்க